Tuesday, December 21, 2010

பள்ளிக்கவிதை

பழைய புத்தகங்களை கிளறும்போது கைக்கு கிடைச்ச ஒரு கவிதை......ப்லொக்கில போடலாம்னு நினைச்சேன்...ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எழுதினது... வாசிச்சு பார்த்துட்டு எப்புடி இருக்குதுன்னு சொன்னா சந்தோசமா இருக்கும் :)

காலையிலே பொய் சொல்லி
தலையிலே குட்டு வாங்கி
மூலையிலே உட்கார்ந்து
அலையலையாய் கண்ணீர்விட்டு

மதியவேளை வீடுசென்று
வேலைகளை முடித்துக்கொண்டு
கட்டிலுக்கு சென்றால்
கண்ணை சொக்கும் தூக்கம்

மாலையிலே எழுந்து - பள்ளி
வேலைதனை செய்யப்போனால்
தொலைகாட்சி பார்க்கும் எண்ணம்
தலைமேல் தோன்றும்....

தொலைக்காட்சி பார்த்துவிட்டு
பள்ளிவேலை செய்யாமல்
புதுப்புது கனவுகான
படுக்கைக்கு சென்றிடுவேன்

அதிகாலை எழுந்து
பள்ளிவேலை செய்யவென்றால்
காலையில் எழும்போது
கதிரவன் கிழக்கில்

பள்ளியிலே முதல் பாடம் - ஆசான்
வீட்டுப்பாடம் எங்கே என்றால்.....
( மீண்டும் முதல்வரியில் தொடங்கவும்)

10 comments:

  1. ஒன்பதாம் ஆண்டில் எழுதியது என்றால் தரம் ஓகே. முடிந்த இடத்தில் தொடங்குவது வித்தியாசம்.

    ReplyDelete
  2. I thought it was a very good attempt as it sounds factual enough to be fine.

    ReplyDelete
  3. நன்றி மது
    நன்றி ஷைலு

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. nice one.bt inum konjm kavithaikkana azhagiya varigal paavichu orukalam.bt etharthanma iruku

    ReplyDelete
  6. நன்றி வைஷு.... நமக்கெல்லாம் கவிதை எழுத வராதுங்க... ஏதோ ஆர்வத்துல பதினாலு வயசுல கிறுக்கினதுங்க இது.... அப்போவே நமக்கு இது சரிவராதுன்னு விட்டாச்சு ..... :)

    ReplyDelete