Wednesday, September 30, 2009

என் நண்பிக்கு....

ஆட்டங்கள் ஒவ்வொன்றும் அடங்கும் வேளையிது
கூட்டம் கூடிப்போட்ட கும்மாளம் குறைகிறது
வாட்டம் என் நெஞ்சை மெல்ல வந்து தொடுகிறது
நாட்டம் நம்மில் கொள்ள மனம் துடிக்கிறது

இன்று இனிதே மேடையேறின ஒத்திகைகள்
நாளை நம்முன் அரங்கேறும் நாடகங்கள்
பார்வை இருந்தும் ஆகின்றோம் குருடர்கள்
ஊமைகளுக்கும் ஆசை ஆவதற்கு பாடகர்கள்

பழக இயற்கை கொடுத்த வரம் சில மாதங்கள்
பிரிய இயற்கை கொடுத்த சாபம் பல வருடங்கள்
சிரிப்பி நமக்குள் இருந்ததோ சில வாரங்கள்
பரீட்சையும் நெருங்குகிறது...இன்னும் சிலமணி நேரங்கள்

பேனைக்கு உயிர்கொடுத்து எழுதவும் ஆசை
கேட்கிறது என்காதில் மெல்ல உன்குரல் ஓசை
பார்க்கிறது கண்கள் மேசையில் உள்ள காசை
போடுகிறது  என் இதயம் உன் நினைவை அசை

மெதுமெதுவாய் சூழ்கிறது இரவு
பார்வை எதிர்பார்க்கிறது உன் வரவு
உன் காலடி ஓசை தரும் எனக்கு தரவு
நீ வரவில்லையெனில் முறிந்தது நம் உறவு....

வருடங்கள் கழிந்தபின் கேட்காதே நீ யாரென்று
கன்னத்தில் அறைந்து சொல் என் தோழியென்று
அந்த நாள் சீக்கிரமே வரவேண்டுமென்று
மனம் எண்ணுகிறது நாட்களை ஒன்று, இரண்டு.......!

No comments:

Post a Comment