Wednesday, September 30, 2009

இடம்பெயருகிறேன்

கால் வலிக்கிறது
கை நடுங்குகிறது
மனம் ஓய்வெடுக்க சொல்கிறது
உயிர்பயம் துரத்துகிறது

ஒரு கையில் துணிப்பை
மறு கையில் புத்தகப்பை
எதிர்காலம் கேள்விக்குறி
நிகழ்காலம் பதுங்கு குழி

வானத்தில் விமான வேடிக்கை - எம்
வாழ்க்கையில் அது வாடிக்கை
விடியும் பொழுதுகளில் சிறு நம்பிக்கை
வாழவேண்டும் என  உயிருடன் என் தங்கை..........!

No comments:

Post a Comment